புத்தாண்டு

புத்தாண்டு-பிறந்துவிட்டது!
நதிகள்-இணைந்துவிட்டது!
வேளாண்மை – இயற்கையானது!
குடிநீர் – செலவில்லை!
கல்வி – பொதுவானது!
மழை – மும்மாரி ஓயவில்லை!
ஆண் , பெண் – சாதியானது!
மதங்கள் – காணவில்லை!
இரவிலும் – பெண்டிர் நடமாட்டம்!
தங்கம் – சீண்டஆளில்லை!
அரசியல் – மக்கள் மேடையானது!
இன்று மட்டும் இந்த கனவு!
கனவிலே நிறைவு காணும்!
மக்கள் மனதில் நம்பிக்கை!
அடுத்த புத்தாண்டு வரை!

Published by

kalaichemmal

Hoping to rediscover my love for Thamizh through poems. :)

Leave a comment