பயணம்

b872edd292c5f63fffa5fc5d8de7168e

கருக்குழாயில் வாழ்வின் முதல் பயணம்!
கருப்பையில் சிசுவாக அடுத்த பயணம்!
பத்துமாதம் தாய் வயிற்றில் ஏகாந்த பயணம்!
முதல் மூச்சை முத்தமிட்ட குழந்தை பயணம்!
நான்கு கால்களால் தரையை தொட்ட சிலிர்ப்புப் பயணம்!
இருகால் மனிதனாக வாழ்க்கை பயணம்!
பெற்றோர் அரவணைப்பில் பாசப்பயணம்!
இடையில் மின்னலாய் காதல் பயணம்!
மனைவி மக்களோடு  உறவுப்பயணம்!
சோதனை காலங்களில் நம்பிக்கைப்பயணம்!

ஏற்றுக்கொண்டேன் இப்பயணங்களை இன்பமாய்!
எப்போதோ வரும் இறுதிப்பயணம்?
ஏற்றுக்கொள்ள வலிமை வேண்டுமே இறைவா!!

 

 

image courtesy : Google

எதிர் வீடு

download
ஆர்வத்துடன் கண்கள்!
மனைவிக்கும், மகளுக்கும்!
பார்வையின் காரணம்?

புதுக்குடித்தனம் எதிர்வீட்டில்!

அன்பும்,நட்பும் விரிவடையும் மகிழ்ச்சி  அவர்களுக்கு,
ஏனோ என் கண்கள் மட்டும் அழகை எடைபோடுகிறதே,
திருட்டுத்தனமாய் !

ஏன்?

ஓ! ஆழ்மனதின் பலகீனமோ?!

மழை

moma-rain-room

சூல் கொண்டமேகங்களின் ,
ஆனந்தகண்ணீரின் வெளிப்பாடுதான்,
புயல் இடி மின்னல்.மழையோ?

மனிதனுக்கு இன்பம் ஒருபுறம் ! துன்பம் ஒருபுறம்!
வருணபகவான் அருளுக்கு
எத்தனை வேள்விகள்.?எத்தனை பூஜைகள்?
ஒருநாள் புண்யத்தை ஏற்பதில்
மனிதனுக்கு  தயக்கமோ?

இயற்கையின் கடமையை ஏற்பதுதான் இயல்பு~

ஆனால் ஒரு கேள்வி-
அமிர்தமும், அளவோடுதான் வேண்டுமா?!

image source:newyorksightseeingtours.wordpress.com

ரகசியம்

tattle_tale

மண் விட்டுக்கொடுத்தால்,
விதை உதயமாகும்!

மேகம் விட்டுக்கொடுத்தால்,
பூமியில் மழை முத்தமிடும்!

பூ விட்டுக்கொடுத்தால்,
மணம் சுகந்தக் காற்று வீசும்!

மரங்கள் விட்டுக்கொடுத்தால்,
பறவைகள் வாழும்!

இறுகப்பற்றுவதில் இல்லை இன்பம்,
வாழ்வின் ரகசியம் விட்டுக்கொடுப்பதுதான்!!!

picture source: Google

கூர்மை

tumblr_mx6tyuSpGL1rprhpmo1_1280

வாளின் கூர்மை மனிதனை வீரனாக்கும்!
ஏரின் கூர்மை நிலத்தை பண்படுத்தும்!
கண்களின் கூர்மை காதலை வசப்படுத்தும்!
பேனாவின் கூர்மை காவியம் படைக்கம்!
சிந்தனையின் கூர்மை அறிவாளியாக்கும்!
பக்தியின் கூர்மை ஞானியாக்கும்!

ஆனால்

மனித உள்ளங்களை காயப்படுத்தும்,
சொற்களுக்கு கூர்மை வேண்டாமே!!

Picture source : positivelifetips.com

நிலா

beautiful-full-moon-starry-night-wallpaper

வானில் மெருகிட்ட வெள்ளித்தட்டாய் இருந்தாலும்,

கற்கள் பாறைகள்  நிரம்பியதாக இருந்தாலும்,

சூரியனின் பிரதி ஔி என தெரிந்திருந்தாலும்,

முழுநிலா தேய்ந்து பிறை நிலாவாகும் என இருந்தாலும்,

கவிகள் உன் புகழ்பாடி ஒய்ந்திருந்தாலும்,

உன் உதயம் மலர்களுக்கு மலர்ச்சியாய் இருந்தாலும்,

காதலர்களுக்கு சாட்சியாய் நீ இருந்தாலும்,

உன்னை காணும் நேரமெல்லாம் விந்தைதான்!

மனிதனை மயக்குவது மாயத்தோற்றம்  தானோ?

Image source : www.inspiringwallpapers.net

தேர்தல்

after_election_1076045

புற்றீசல் போல்புதுக்கட்சிகள்,
தாமரை இலை தண்ணீராக,
தீடீர் கட்சி கூட்டணிகள்!
ஆதாயம் தேடும் அபாரதலைவர்கள்,
கட்சிக்கு ஜாதி பேதமற்ற
அழைப்புகள்!
தாராள வாக்குறுதிகள்!
ஏராள பண விரையங்கள்!
தெருவுக்கு தெரு ஒலிபெருக்கிகள்!
மேடைப்பேச்சுகள்!
வரையறை மீறிய செலவுகள்!

பல வருட துண்டு விழாத
பட்ஜெட் போடலாம்!

ஒன்று மட்டும் நிச்சயம் –

அடிமட்ட தொண்டனின் வீட்டில்
அடுப்பு பொங்கும்
சில நாட்கள் மட்டும்!

வரப்போகிறது தேர்தல்

Picture courtesy : google (toonpool.com)

வி ஐ பி

கோடிகளில் நிலம்
மாடமாளிகை  மின்னும் விளக்குகள்
எண்ணிலடங்கா விஸ்தார அறைகள்
கவின்மிகு திரைசீலைகள்
உள்அலங்காரம் இந்திரசபை
கண்கவர் ஓவியங்கள்
மரவேலைப்பாட்டுடன் கதவுகள் மாடங்கள்
எழில்மிகு தோட்டங்கள் தெய்வச்சிலைகள்
வரிசையாக வெளிநாட்டு வாகனங்கள்
உயர்ரக நாய்கள்

எல்லாம் உண்டு

பரந்தாமன் அருளினால்
இதை அனுபவித்து வாழ்பவர்கள்
ஏழைப்பணியாளர்கள்

மாளிகை  முதளாளிக்கு
வாழ்கையிின் அதிகநேரம்
வெளியில்தான்

Posted from WordPress for Android

கூந்தல்

432300a53ace6613be7b84eb72757cc6

அலைஅலையாய்  கருங்கூந்தல்,
ஆறடி நீளத்தோடு!

உரம்போட்டு ஊட்டத்தோடு
உற்சாகத்தோடு வளர்தேன்,
அழகுக்கு இலக்கணமாய்
மயிலின் தோகையாய்!

பரிசுகள் பாராட்டுகள்
புகைப்படங்கள்,விளம்பரங்கள்,
விதவிதமான அலங்காரங்கள்,
பூக்களின் வாசத்தோடு!

பகட்டான வாழ்வு

பலமுறை சுட்டது என்னை
பெண்களின் ஏக்கப்பெருமூச்சு!
இவையெல்லாம் சூன்யமாகியது
ஒரு கணம்!

கூந்தலை இழந்த புற்று  நோயாளிப்
பெண்களுக்கு தானமாக என்
கூந்தல் பயன்பட்டபொழுது!!

Picture Courtesy:Google